அழிவின் தத்துவம்
எஸ்,என்,நாகராஜன்
(1987/ல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடாக வந்த அழிவின் தத்துவம் என்கிற சிறு வெளியீடு தற்போது பதிப்புரையுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது)
தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடாக 1987 ஆம் ஆண்டு அறிஞர் எஸ்.என்.நாகராசன் அவர்கள் எழுதிய அழிவின் தத்துவம் என்கிற நூல் அந்த வரையறைக்கு மிகவும் பொருத்தமான நூலாக இருந்துள்ளதை இன்றுள்ள சூழல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ள இயலும். அந்நூல் இப்போது மறுபதிப்பு செய்யப்படுகின்றது.
இந்த நூல் வெளிவந்த காலத்தில் புதிய உலக ஒழுங்கிற்கான உலகமயமாக்கல் (எங்ய்ங்ழ்ஹப் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்ள் ர்ய் பஹழ்ண்ச்ச்ள் ஹய்க் பழ்ஹக்ங் - எஅபப) அதன் தொடக்கக் கட்டத்திலேயே இருந்தது. எனவே, அன்றைய காலகட்டத்தின் நிலைகளில் இருந்து எதிர்கால உலகினை எதிர்வுகூறும் கருத்துக்களை நூல் கொண்டுள்ளது. எனவே அதன் எதிர்வுகூறலை துல்லியமாக இருக்க வேண்டும் என கருதிப்பார்க்காமல், உலகின் போக்கு குறித்த அவரது முன்கூறலைப் பார்க்க வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும்.
புதிய உலக ஒழுங்கு எனப்படும் உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தங்கள் இன்று உலக நாடுகளின் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகளை பெருமளவில் மாற்றியமைத்துள்ளன. பெரிய போர்கள் அற்றவகையில் தங்களின் நிரந்தரச் சுரண்டலுக்குத் தேவையானவற்றை சாதிக்க அவை விரும்புகின்றன. அதற்காகவே உலக அளவில் எல்லா நாடுகளும் பங்கேற்கும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவும், அவற்றின் வழியாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய, செல்வக் குவிப்பை ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக அறிவிக்கப்படாத சதித்திட்டங்கள் வழியாக தங்களின் நோக்கத்தை அடைவதை நோக்கி அவர்கள் முன்னேறிவருகின்றனர். உலகெங்கும் உள்ள இயற்கை வளங்களுக்காக அவர்கள் போர்களை நடத்துகின்றனர், நோய்களை உருவாக்குகின்றனர், பண்பாட்டுச் சீரழிகளை பரப்புகின்றனர். அவை அத்தனைûயும் வளர்ச்சி என்ற பெயராலும், மக்கள் நலன் என்ற பெயராலும், மனித உரிமைகள் என்ற பெயராலும் நடத்தி வருவதால் மக்கள் இவற்றை உணர்வது மிகவும் கடினமானதாகியுள்ளது.
இவர்கள் உலக நாடுகளை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். (1) உடனடியாக இயற்கை வளங்களுக்காக மக்களைக் கொன்று சுரண்டப்பட வேண்டிய நாடுகள் (2) உடனடியாக போர்களால் மக்களைக் கொல்லாமல் நீண்டகால அளவில் மெல்ல மெல்ல மக்களிடம் பல்வேறு நோய்களைப் பரப்பி, மருந்துவிற்று, தங்கள் உற்பத்திகளை விற்பதற்கான சந்தைகளைக் கொண்டுள்ள நாடுகள் என்பனவாக அவை உள்ளன. (இவர்களும் பின்னர் அவர்கள் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களுக்காகக் கொல்லப்படுவர்.)
முதல் வகையான நாடுகளாக எண்ணை வள நாடுகளைக் கொள்ளலாம். எண்ணைவள நாடுகளில் தேவையற்ற போர்களை உருவாக்கியும், அதன் வழியாக அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கியும், தங்கள் சுரண்டலை மேற்கொள்வது. இந்த நாடுகளில் உள்ள மக்களை அவர்கள் புழு பூச்சிகளுக்கும் கீழாக நடத்துவதை நாம் காணலாம். ஈரான், ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள் போன்றவற்றைக் குறிக்கலாம்.. ஆப்ரிக்க நாடுகளில் பரப்பப்பட்ட உயிர்கொல்லி நோய்கள் என பயமுறுத்தப்பட்ட எயிட்ஸ், எபோலா வைரஸ் நோய், ஆப்ரிக்க மக்கள் தொகையைக் குறைப்பதற்கான செயல்திட்டமாகவே கருதத்தோன்றுகின்றது. இம்மக்களை கொன்று அவர்களின் அளப்பரிய கனிம வளங்களையும், இயற்கை வளத்தையும் கொள்ளையிடுவதே இவர்களின் நோக்கமாகும்.
இரண்டாம் வகை நாடுகளாக வளரும் நாடுகள் எனப்படும் பெருவளச் சுரண்டல் இலக்கு நாடுகளைக் கொள்ளலாம். இந்த நாடுகளை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருகின்றனர். இத்தகைய நாடுகளில் இவர்கள் தங்கள் சுரண்டலை நீண்ட காலத்திற்கு மேற்கொள்ள திட்டமிட்டு செயல்பட்டு வருவதை அறியலாம்.
தற்சார்பைத் தகர்த்தல், அடிமைக் கல்வியை உருவக்குதல், பண்பாட்டுச் சீரழிவிற்குள் மக்களைத் தள்ளுதல், நுகர்வுக் பண்பாட்டினை ஊட்டிவளர்த்தல், ஆகியவற்றின் மூலமாவும், மருந்து மாத்திரைகள், நுகர்வுப் பொருட்கள் விற்றல் ஆகியவற்றின் மூலமாகவும் இவர்கள் இந்நாடுகளைத் தற்போது சுரண்டி வருகின்றனர். இத்தகைய நாடுகளில் உள்ள மக்கள் தொகை இவர்களின் தொழிற்கூடங்களில் குறைந்த கூலிக்கு உழைக்கவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவுமான சந்தையாகவும் பயன்படுவதால் இவர்கள் இப்போதைக்குக் கொல்லப்பட மாட்டார்கள். இந்த நாடுகளையும் கூட முதல்வகை நாடுகளைப் போல மக்களைக் கொன்று சுரண்டுவதே இவர்களின் இறுதி நோக்கம்.
இந்தியா போன்ற நாடுகளில் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காமாலை என்கிற பெயரில் அச்சுறுத்தி பரப்பப்படும் நோய்கள் அவற்றிற்கான தடுப்பு மருந்துகள், முறிவு மருந்துகள் என்பனவற்றின் வழியாக அவர்கள் போர்களால் கொல்லத் தேவையற்ற மக்களைச் சுரண்டி தங்கள் செல்வங்களை பெருக்கி வருகின்றனர். இத்தகைய நாடுகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 1000 தம்பதிகளில் ஒருவருக்கு என இருந்த பிள்ளைப்பேறின்மை இன்று 100 தம்பதிகளுக்கு இரட்டை இலக்காக மாறியுள்ளது சாராணமாக நிகழ்ந்துவிடவில்லை. இயற்கை எந்த உயிரினத்தையும் அப்படிப் படைக்கவில்லை. லட்சத்தில் ஒருவருக்கு என இருந்த நீரிழிவு நோய் இன்று பரவலாகக் காணப்படுவது மருத்துவ அறிவியலின் முன்னேற்றமல்ல. கேடு. தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறிக்கொள்வதை ஒரு பெருமையாக அறிவிக்கும் மனப்பாங்கை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளன நோய் வணிக (மருந்து வணிக) கும்பல்கள்.
முதல்வகை நாடுகளின் இயற்கை வளங்களை அம்மக்களைக் கொன்று கொள்ளையிடப்பட்ட பின்னர் இரண்டாம் வகை நாடுகளுக்குள் இவர்கள் புகுவார்கள். அப்போது இங்குள்ள மக்களும் கொல்லப்பட்டு அவர்களின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் முற்றிலுமாகச் சுரண்டப்படும்.
ஒட்டுமொத்தமான இச்சுரண்டல் இப்போதைக்கு நில்லாவிட்டாலும், என்றாவது இது முட்டுச் சந்திந்தில் போய் முட்டிக்கொள்ள வேண்டி வரலாம். அதற்குள் இந்த நிலவுலகம் இவர்களால் அழிக்கப்பட்டுவிடலாம். அந்த அபாயத்தை உணர்ந்தே வாழத் தகுதியற்றதாக இந்த பூமி மாறும்போது இங்கிருந்து வெளியேறி அண்டத்தின் வேறு பகுதியில் மனிதர் வாழத்தகுந்த ஒரு இடத்தில் குடிபுகும் நோக்கோடே இவர்களின் விண்வெளி ஆய்வுகள் அமைந்து வருகின்றன.
அப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பாகவே, இயற்கைக்கு எதிரான இவர்களின் இந்த சுரண்டல் வெறியை எதிர்ப்பதற்கான பலமும், சக்தியும் உலக மக்களிடம் உள்ளது. அதை ஒன்றுபடுத்தும் அமைப்பு இல்லாவிட்டாலும்கூட மக்கள் இந்த அழிவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலும்.
இத்தகைய சுரண்டலுக்கு எதிரான இயக்கமோ, அமைப்போ உலக அளவில் இன்று இல்லை. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்கிற முழக்கம் வெற்று முழக்கமாகிவிட்டது. உலகத் தொழிலாளர்கள் இன்று ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை எனலாம். பல்வேறு வகைப்பட்ட சமூக நிலைகளில் உள்ள மக்களை ஒன்றிணைப்பது சாத்தியமற்றதாகியுள்ளது. ஒரே நாட்டிற்குள் இருக்கும் வெவ்வேறு தொழிலாளர்களை இணைப்பதே இன்று சாத்திமற்றதாகி உள்ள நிலையில் உலகத் தொழிலாளர்களை இணைப்பது கற்பனை நடவடிக்கையே. எனவே, அந்த முழக்கத்தை இன்று மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
சுரண்டல் சத்திகளின் அடிப்படையைத் என்பதைத் தகர்த்தாலே சுரண்டல் சக்திகளை ஒழிக்க இயலும். எல்லாச் சுரண்டல் சக்திகளுக்கும் சந்தை அவசியம். அந்தச் சந்தையை முடக்குவதே நாம் வெற்றிபெறுவதற்கான வழி. இயற்கை அதற்கான பாதையை நமக்கு எப்போதும் வைத்துள்ளது என்பதுதான் நாம் இதில் கண்டடைய வேண்டிய உண்மையாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி அவர்கள் முன்வைத்த தற்சார்பும், எளிய வாழ்வும்தான் அந்த வழி. காந்தியம் என்னும்போது அந்த நெறியில் காந்தியைத் தவிர இருந்த மற்றவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வந்துள்ளனர். ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியவாதிகள் முன்வைத்த தற்சார்புப் பொருளாதாரம் சாதாரணமானதல்ல. எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கைக்கான அறிவியல், தற்சார்புப் பொருளாதாரம் ஆகியவையே அவை. அந்த நெறியை செழுமைப்படுத்தி நாம் ஒரு இயக்கமாக பரப்பும்போது சுரண்டலுக்கு அடிப்படையான சந்தைப் பொருளாதாரத்தைத் தகர்க்க இயலும். வாங்குவதற்கு ஆள் இல்லையெனில் விற்பதற்கும் எவனும் இல்லை என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
இயற்கை அன்பானது. அறத்தின் வழியானது. இயற்கை வாழ்வு இனிமையானது. துன்பமற்றது. நிறைவானது. நிறைவான வாழ்வை நோக்கி நடைபோடுவோம்.
அன்புடன்,
தமிழினியன்.
.........................................................................................................................................
நூலுள் புகுவோம்.
காடுகள், பிராணிகள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கும்போது உண்மையில் மனிதர்களையும் அவர்களின் புறத்தைப் பற்றிய பிரச்சனைகளைப் பற்றியுமே ஆராய்கிறோம். மனிதர்களின் வரலாற்றைப் பார்த்தோமானால் நிலையான விவசாய வாழ்விற்காக மனிதர்கள் காலங்காலமாக பெரும்பரப்பான காடுகளை அழித்து வந்திருக்கின்றனர். கங்கை, காவிரிப் பகுதிகள் பெரும் காடுகளாகவே இருந்துள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் அக்காடுகளை அழித்துவிட்டார்கள். தென்னிந்தியாவிலும் இதே கதை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்புகூட இருந்த வளமான வெப்ப, மிதவெப்ப காடுகளை ஆதிக்க மனிதர்கள் அழித்து நாசமாக்கி விட்டார்கள். விரைவில் அவர்கள் தம் செயல்களுக்கான பயனை அனுபவித்தே தீருவார்கள்.
எகிப்திய பிரமிடுகள் பாலைவனத்தின் நடுவில் நிற்பதை இன்று நாம் பார்கின்றோம். அதைக் கட்டிய மக்கள் உண்மையாகவே அவற்றைப் பாலைவனத்தின் நடுவிலா கட்டியிருப்பார்கள்? சந்தேகமே. உண்மையில் நாம் இந்தப் பிரமிடுகளின் வரலாற்றைப் ஆராயப் புகுந்தோமானால் எகிப்திய பாலைவனங்களின் வரலாற்றையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். பிரமிடின் மிகப்பெரிய கல் சதுரங்களை அத்தனை உயரத்திற்கு உயர்த்த என்ன வழி என்று எகிப்திய பிரபுக்கள் பார்த்தார்கள். சுற்றியிருந்த காட்டு மரங்களை வெட்டிச் சாய்த்து அக்கட்டைகளை உருளைகளாகப் பயன்படுத்தி கற்பாளங்களை மேலுயர்த்தலாம் எனக் கண்டார்கள். அதற்கு முன்புவரை சகாராவின் மணல்மேடுகள் கிழக்கு நோக்கிப் பரவாமல் நைல் நதியின் மேற்குக்கரையில் இருந்த காடுகள் தடுத்து வந்தன. அக்காடுகளை பிரமிடு கட்டுவதற்காக அழித்தார்கள் பிரபுக்கள். இப்போது காடுகள் இல்லை. மணல்மேடுகள் மரங்களற்ற வெளியை விரைந்து மூடின. இன்று பாலைவனத்தின் நடுவில் பெரிய பிரமிடுகள் நிற்கின்றன. ஆகவே காடுகளை நாம் முறையாகக் காப்பாற்றாவிட்டால் மனிதர்களின் அபத்தப் பேராசையின் காரணமாக இன்றைய காடுகள், நாளைய பாலைவனங்களாகிவிடும்.
இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் கருத்து யூத கிருத்துவக் கருத்தாகும். டார்வினியமும் இதே கருத்தையே அறிவியல் என்ற பெயரில் நியாயப்படுத்துகின்றது. நவீன அறிவியலும் இயற்கையை அழிக்கும் கண்ணோட்டம் கொண்டுள்ளது.
நவீன அறிவியலில் பொதிந்துள்ள கண்ணோட்டத்தை டார்வினிய நிலைப்பாட்டில் வெளிப்படையாகக் காணலாம். இந்நிலைப்பாடு யூதகிருத்துவ தத்துவத்தின் தொடர்ச்சிதான். அதுவோ கிரேக்கத் தத்துவத்தின் மலர்ச்சிதான். கிரேக்கத் தத்துவம் (ஹெலனியம்) அடிமைச் சமுதாயத்தில் பிறந்த தத்துவமாகும். ஆக, நவீன அறிவியலின் அடிப்படை நோக்கம் அடிமைச் சமுகத்தை உருவாக்கவும் அடிமைப்படுத்துவதற்காகவே.
இயற்கை இழிவானது என்றது ஹெலனியம். உயிருள்ள யாவற்றையும் கீழ்ப்படுத்தி ஆண்டனுபவிக்கும் உரிமையை வாக்களிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார் கடவுள் என்கிறது யூத-கிருஸ்துவ வேதம். வெள்ளையரும் தொழில் வளர்ச்சி பெற்றவர்களுமான மனிதர்களே இன்றைய வாக்களிக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். உயிர்கள் தம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பகையான சூழலை எதிர்கொள்கின்றன. எனவே செயலாக்கமுள்ள போராட்டம் மூலமே அவை உயிர் பிழைக்க முடியும் என்கிறார்கள்.
டார்வினியம் கூறுவதும் இதுவே. எந்த உயிரினமும் உயிர் பிழைக்க வேண்டுமெனில் அது இரு அடிப்படையான காரியங்களைச் செய்தாக வேண்டும். (1) உண்மையானதும் சாத்தியமானதுமான எதிரிகளிடமிருந்து தன்னை வலுவாகத் தற்காத்துக்கொள்ள வேண்டும். இதற்கு எந்த வழியிலாவது அந்த எதிரியை அப்புறப்படுத்த வேண்டும். (2) தனது இரையை வெற்றிகரமாகச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இங்கும் தேவைப்பட்டால் தன் போட்டியாட்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இவ்விரு காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றும்போது உயிர் பிழைப்பு உறுதி செய்யப்படுகின்றது. இத்துடன் இனப்பெருக்கமும் அவசியம்.
எனவே, மனிதர்கள் சிறப்பாக வெள்ளைநிற மனிதர்கள் தம் எதிரிகளை ஒழித்துக்கட்டி தம் உணவை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதுவே அவர்கள் வெற்றிகரமாக உயிர்தரிப்பதற்கு அடிப்படையாக உள்ளமையால் அவர்களின் எல்லாச் செயல்பாடுகளும் இந்த அடிப்படைக் கருத்திலிருந்தே எழுவதாகத் தோன்றுகிறது..
வெப்பமண்டல காடுகளின் பயங்கர அழிவு, நன்னீர், கடல் நீர், ஆகாய நீர் ஆதாரங்கள் கெடுக்கப்படுதல், மூன்றாம் உலகில் சகட்டு மேனிக்கு அணுக்கழிவை கொண்டுவந்து கொட்டுதல், பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு என்ற பெயரில் வெப்ப மிதவெப்ப நாடுகளில் எல்லாவிதமான ரசாயனங்களையும் கொண்டுவந்து தெளித்தல் போன்ற வெள்ளை மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நாம் பின்வரும் ஒரே முடிவிற்கே வரவேண்டியுள்ளது.:-
மேற்கத்திய நவீன அறிவியல், தொழில்நுட்ப மனிதர்களின் பிரதான நோக்கம் என்ன? கருப்பு, மாநிற, மஞ்சள் இன மக்கள் அனைவரையும் கூண்டோடு ஒழித்துவிடுவதே அவர்களின் நோக்கம். அவர்கள் கருத்தில் இம்மக்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய பூச்சிகள். இந்த மக்கள் இவ்வளவு பெருந்தொகையில் உயிர்வாழ்வது வெள்ளையருக்குத் தேவையில்லைபோல் தெரிகின்றது. இது நாம் வலிந்து உருவாக்கும் முடிவல்ல. தண்டிக்கப்படுவோம் என்ற பயமின்றி (எங்கனும்) அவர்கள் இழைக்கும் சிதைப்பு வேலைகளைப் பார்க்கும்போது வேறு முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை.
எல்லா நாடுகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இந்தியாவிலேயே காந்தியர்கள் இருப்பினும் ஒவ்வொரு மணிநேரமும் அழிப்பு வேலைகள் அதிகரித்தபடி உள்ளன. ஆதிக்கத் தரப்பினர் இந்நிலைபற்றி முழுக்க அக்கரையற்றுள்ளனர். இதை எப்படி விளக்குவது?
மேற்கு நாடுகளின் இன்று பிரதானமாக சர்ச்சிக்கப்படும் தலைப்பு “அதீத மக்கள் பெருக்கம்”. மேற்கத்தியர்-வெள்ளையர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் பிழைக்கிறார்கள். அத்தரத்தை தொடர்ந்து நீடிக்க உலகின் மூலவளங்கள் அத்தனையும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஏற்கனவே உலகின் மூலவளங்கள் 60% க்குமேல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளன. நம் காடுகள் நம்முடைய காடுகளாய் இன்று இல்லை. அவை வெள்ளையரின் காடுகளாயுள்ளன. நமது எண்ணை வயல்கள் நம்முடையன அல்ல. அவர்களுடையது. ஆழ்துளை போடவும், சுத்திகரிக்கவும் தேவைப்படும் தொழில்நுட்பம் அவர்களிடமேயுள்ளது. எனவே, அவர்கள் தயவில், மேற்குலக நாடுகளுடன் மிகவும் பாதகமான வியாபார உறவு கொள்ள நாம் நிர்பந்திக்கப்படுகின்றோம். ஓரிரு நாடுகள் தவிர எல்லா மூன்றாம் உலகநாடுகளின் நிலையும் இதுவே.
முன்பெல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியரின் நலனுக்கான வேலைகளைச் செய்துமுடிக்க அந்நாடுகளின் மக்கள் தேவைப்பட்டனர். (இன்றும்கூட வெப்ப, மிதவெப்ப நாடுகளில் வெள்ளையர் வசதியாக வாழ முடியாது. வெய்யிலில் இறங்கி அவர்களால் வேலைசெய்ய முடியாது) இரண்டாம் உலகப்போருக்கு முன்பு தம் சர்க்கரை, ரப்பர், காபி தோட்டங்களில் உழைக்க அவர்களுக்கு சிங்குகளும், கூலிகளும், இந்தியரும் தேவைப்பட்டனர்.
இன்று ஒரு புதிய நிலை உருவாகியுள்ளது. இன்று இம்மக்கள் கூட்டத்தின் பெரும்பகுதியை கழித்துக்கட்டிவிட்டு அவர்களுக்குப் பதிலாக இயந்திரங்களை அமர்த்திவிடலாம் என வெள்ளையர்கள் கருதுகின்றார்கள். இயந்திரங்கள்தாம் கலகம் செய்யாதே. மனித உழைப்பை விலக்கி உற்பத்திச் செலவைக் குறைக்க, மின்னணு இயந்திரங்களை அவர்கள் இன்று நம்புகின்றார்கள்.
எனவே அவர்களின் கொள்ளைக்கு இன்று பெரிய அளவில் அடிமை மக்கள் தேவையில்லை. மாறாக இயற்கை மூலவளமே அவர்களுக்கு அதிகஅதிகமாகத் தேவை. எனவே இம்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களின் இயற்கைச் செல்வங்களை அபகரித்துக்கொள்ளலாம் என வெள்ளையர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இம்மக்கள் மீது நேரடியாக குண்டுகள் வீசமுடியாதே. எனவே. வேறு வழிகளில் தம் அழிப்பு வேலைகளை நடத்தி வருகிறார்கள். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமுண்டா?
இந்தப் புதுக்காலனிய வெள்ளை அரக்கர்களின் முழு நோக்கத்தையும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பேரால் நடத்தப்பட்டுவருபவை, நம்மை அழிக்கும் திட்டம் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள மாட்டோம். கருத்து மயக்கம் ஏற்படுத்தக்கூடிய “வளரும் நாடுகள்” என்ற பதத்திற்கு “அழிக்கப்படும் நாடுகள்” என்ற பதத்தைப் போட வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். வெள்ளையரின் தரகர்களான நமது அறிவியலரும், நமது மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களை மழுங்கடிக்கும் சொல்லாகிய “வளரும்” என்பதையே தெடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
வரும் பத்திருபது ஆண்டுகளில் இவர்கள் எதிர்நோக்குவது என்ன? ஆசியாவின் பெருமளவிலான மக்கள் பஞ்சத்தாலும், பெருநோய்களாலும் ஒழித்துக்கட்டப்படுவார்கள். தம் கைக்கடக்கமான அளவிற்கு அந்த மக்கள் தொகை குறைந்ததும் மிச்ச மக்கள் தொகையினரில் பெரும்பகுதியினரை மலடுகளாக்கி அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். மலடுகள் கிளர்ச்சி செய்ய மாட்டார்கள். கிளர்ச்சிப்போக்குக்கு ஓர் உடலியல் அடிப்படையும் உண்டு. மலடாக்குவதன் மூலம் இந்த அடிப்படையை அழித்துவிடலாம். வேலைக்காரத் தேனீக்கள் போன்ற மலட்டு உழைப்பாளக் கும்பல்களை இவ்வாறு உண்டாக்க முடியும். இந்த உழைப்பாளிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் தமக்கு இட்ட வேலையைச் செய்வர். குழந்தைப்பேறு உண்டாக்காத கட்டற்ற கலவி அனுமதிக்கப்படும். இதையெல்லாம் நடத்திக்காட்ட அறிவியலால் முடியும்.
ஆங்கிலம் படித்த அடிமை அறிவியலரும், தொழில்நுட்பக்காரரும் அங்கு ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் மேற்சொன்ன வேலைகளைத் தம் வெள்ளை ஆண்டைகளுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் மிகநன்றாக செய்துமுடிப்பார்கள். இந்த வளர்ச்சித் திட்டங்களின் பின்னால் மறைந்துள்ள முதன்மையான நோக்கம், வெள்ளையர் அல்லாத மக்கள் தொகையை அழித்தொழிப்பதே ஆகும். அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளும் சாதிக்க முடியாததை இந்த வளர்ச்சித் திட்டங்கள் சாதித்துவிடும். இதில் உங்களுக்குச் சந்தேகம் உண்டா?
ஆமாம். வெள்ளையர் இச்சிக்கலை ஒருபோதும் விவாதித்தே இல்லையா? விவாதித்தார்கள். என்னருமை நண்பர்களே. மேலை அறிவியலாளர் இத்திட்டத்தை விரிவாக விவாதித்தனர். அவர்கள் மூவகையினர். (1) கொடுநெறியாவாதிகள் (பாசிசர்) (2) தாராளவாதிகள், (3) மனிதநேயவாதிகள், மார்க்சியர்.
இங்கிலாந்தில் கொடுநெறிப்போக்குக்கு டார்லிங்டனும், ஹில்லும், பிரதிநிதிகளாக இருந்தனர். ஜே.ஹெக்ஸ்லி தாராளப்போக்கை பிரதிநிதிப்படுத்தினார். மனிதநேய-மார்க்சியப் போக்கை ஹால்டேன் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தப் பெரும் விவாதத்தின் உள்ளடக்கத்தைப் பார்ப்போமா?
வலுவற்ற உயிரினம் சாவது இயல்பே. இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்ற டார்வினியக் கருத்தை டார்லிங்டன் கிளப்பினார். வெள்ளையரல்லாத இனத்தார் வெள்ளையருக்கு நிரந்தர அடிமைகளாக இருக்க வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்படவேண்டும். உலகமும் அதன் மூலவளங்கள் அனைத்தும் வெள்ளை இனத்திற்கே சொந்தமாக வேண்டும் என்றார் இவர். இவரது வாழ்க்கையின் உண்மைகள் என்ற நூலை வாசித்தீர்களானால் அந்நூல் ஒருகொடுநெறிவாத உயிரியலாளன் எழுதியது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இத்தகைய உயிரியலாளர், அறிவியலாளர் அநேகம்பேர் உள்ளனர். மேலைச்சமூக உயிரியலாளர், பெரும்பாலும் நடத்தைவாதிகள் (பிஹேவியரிஸ்ட்டுகள்) ஆகியோரின் நிலைப்பாடும் கொடுநெறித்தன்மையதே. நமது நாட்டிலும் உயர் இடங்களில் இருப்போர் பலர் இத்தகைய கொடுநெறிவாதிகளை ஆதரிப்போராகவே இருக்கிறார்கள்.
ஜ÷லியன் ஹக்ஸ்லி போன்ற தாராளவாதியர் பலவீனப்பட்ட பிரிவினருக்காக வாதாடுகிறார்கள். எப்படி? செவ்விந்தியர், ஆஸ்திரேலிய புஷ்மன்கள் போன்றவர்களும் வாழ்வதற்கு கொஞ்சம் இடம் ஒதுக்கிவிட வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட இனங்களும் உண்டு என்பதை வருங்கால வெள்ளையர்கள் நேரில்பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். இவர்கள். காட்டுவிலங்குகளைப் பொறுத்துக் காட்டப்படும் உணர்வுகளைவிட மோசமான உணர்விலிருந்து கூறப்படும் கருத்தாக இது இருக்கிறதல்லவா?
இவ்விரு கருத்துக்களையுமே மார்க்சியரும், மனிதநேயரும் மறுத்தனர். மேலும் டார்வினியக் கருத்தைக் திரித்துப் புரட்டுவதாலேயே அக்கருத்து கொடுநெறிக்கருத்தாகின்றது என்றனர் இவர்கள். இவ்விமர்சனம் எனக்குச் சரியாகப்படவில்லை. டார்வினியப் போராட்டமே உண்மையில் கொடுநெறி நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கின்றது. இன்று இது மிக வெளிப்படையாகி வருகின்றது. கொடுநெறியரையும், தாராளவாதிகளையும் மார்க்சியர் மறுத்தாலும் மனிதர்கள் தம்பிழைப்புக்காகப் போராட வேண்டியுள்ளது என்கிற கருத்தின் அடிப்படையில் அவர்கள் உயிர்களின் போராட்டத்திற்கே முதன்மை வழங்குகிறார்கள். இந்நிலையில் மார்க்சியர் முன்வைக்கும் உலகமும், மனிதர்க்கும் இயற்கைக்கும் இடையில் முழு அன்புறவு விளங்கும் உலகமாக இல்லை. இயற்கையை பால்கொடுத்துக் காக்கும் தாயின் சாயலாக மார்ச்கியர் பார்ப்பதில்லை. மார்க்சியரின் உலகம் கண்டிப்புள்ள தந்தையின் சாயலாகவே காணப்படுகின்றது. ஆண்மகனே ஆண்டை, இயற்கை அவனுக்குக் கட்டுப்படுகின்ற அல்லது கட்டுப்படாத அடிமை. அதனை அவன் வெற்றி கொள்ள வேண்டும். இந்நிலையில் கொடுநெறி வாதத்தின் மீதான மார்க்சியரின் விமர்சனம் அதிக கூர்மையாக இல்லை. கொடுநெறிப்போக்கை எதிர்க்கக்கூடிய உண்மையான மாற்றுப்போக்கை மார்க்சியர் இதுவரை படைக்கவில்லை.
“இயற்கையை மனிதன் தனக்குப் பகையானதானவே கருதவேண்டும். மனிதன் தன் அறிவால் இறுதியின் இயற்கையாகிய அரக்கியை வென்று கட்டுப்படுத்த வேண்டும் இதற்கு நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும்” என்பதே நவீன அறிவியலின் சாரமான கருத்து. (மார்க்சியரிடையே பெருமளவில் நிலவிவரும் கருத்தும் இதுவே)
இந்த அடிப்படைக் கருத்திலிருந்து இயல்பாக தொடரப்படும் நிலைப்பாடு என்ன? அதுதான் முன்னே சொன்னதுபோல, தன்னால் சகித்துக்கொள்ளக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு மற்ற எல்லா இனங்களையும் சுருக்கிவிடுவதற்கான திட்டமிட்டு அழிப்பு வேலையை மேலை ஆதிக்க மனிதர்கள் தொடங்கியாக வேண்டும் என்பதாகும். கிளர்ந்தெழ வலுவற்றவர்களாக ஆக்கப்பட வேண்டும்.
இதைச் சாதிப்பதற்கு இன்று சாத்தியப்பாடு உண்மையாகவே (நவீன அறிவியல்-தொழில்நுட்ப வடிவியல்) இருக்கிறது. இந்தப் போக்கின் முடிவில் அவன் நிரந்தர கட்டுப்பாட்டுத் திறனைப் பெற்றுவிடுவானா மாட்டானா என்பதல்ல கேள்வி. அதுவே அவனது இறுதி இலக்காகி இருந்து வருகின்றது. தனது அறிவியலால் அதைச் சாதித்துவிட முடியும் என்று அவன் நம்புகிறான் எனவே அவன் இதை சாதிக்கும்படி நாம் விடப்போகிறோமா இல்லையா என்பதே கேள்வி. அவனது ஆட்டத்தையும், ஆட்ட விதிகளையும், எதிர்க்காமல் நாமும் அவற்றை ஏற்றுக்கொள்வோமானால் கூடிய விரைவில் தவிர்க்கவியலாமல் முழுநாசம் நேரிடும். பார்க்கச் சித்தமாயுள்ளவர்கள் இந்த அழிவு ஏற்படப்போவதற்கான தெளிவான அறிகுறிகளை இப்பொழுதே பார்க்கின்றனர். ஆனால், குறுகிய பார்வைக்காரர்களும், தன்னலக்காரர்களும், அப்பட்டமாகத் தெரியும் உண்மையைக்கூடப் பார்க்காமல் முடிவற்ற விவாதங்களில் மூழ்கிப்போகலாம். தம் உயிரைக் கொடுத்தாவது உண்மையை தரிசிக்க வேண்டும் என்று உறுதியுடைவர்களும், மற்றவர்களுக்காக தம்மையே முழுமையாய் வழங்கச் சித்தமாய் இருப்பவர்களுக்குமே பேருண்மை புலப்படும். இது எக்காலத்திற்கும் பொருந்தும் நியதி.
இதையெல்லாம் எழுதுவதன் மூலம் நான், வலியுறுத்திக்கூற விரும்புவதெல்லாம் இதுதான். மூன்றாம் உலக மக்கள் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இது வெறும் வளர்ச்சிப் பிரச்சனை அல்ல, வாழ்வா சாவா பிரச்சனை. வளர்ச்சியின் பேராலும், அணைக் கட்டுமானத்தின் பேராலும் அதிக உணவு உற்பத்தி என்ற பேராலும் காடுகளை ஒருமுறை அழித்துவிட்டால் உங்கள் மரணத்தீர்ப்பு எழுதப்பட்டாயிற்று என்பது உறுதி. வெளிப்பார்வைக்கு கவர்ச்சியானதும். உடனடி லாபம் தருவதும், நிலையற்றதும், ஒருசார்பானதும் ஆனதுமான நலனில் பற்றுக்கொண்டுவிடுவதே மாயைகளில் பெரிய மாயை. இதையே பொருளுக்கு அடிமைப்பட்ட நிலை என்பர். பொருளுக்கு அடிமைப்பட்ட நிலை நம் பார்வைத்திறனைக் கெடுத்துவிடுகின்றது. உண்மை கண்ணெதிரே இருந்தாலும் கண் தெரிவதில்லை.
இன்று ஓடியாடும் இரட்டைச் சக்கர, மூன்று சக்கர நாலு சக்கர வாகனங்கள் எல்லாம் சாலைகளில் நிரம்பி வழிந்து பாதையை மறிக்கும் ஓட்டை உடைச்சல்களாகிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது நிலங்கள் அணுக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாறிப்போகும். நமது குழந்தைகள் கருப்பைக்குள்ளேயே பொசுங்கிப்போகும். மீறிப்பிறந்தால் ரத்தம் இல்லாமலோ ரத்தப் புற்றோடோ பிறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வெள்ளையரால் முன்வைக்கப்பட்டு உலக வங்கியால் ஆதரிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தின் தவிர்க்கவியலாத விளைவும் இதுவே.
ஆட்டுக்கிடைக்கு ஓநாய் காவலாக முடியாது. என்பது எல்லா இடையனுக்கும் தெரிந்த எளிய உண்மை. மக்களுக்கு ஏகாதிபத்தியம் நண்பனாக முடியாது என்பதும் அவ்வாறே. துரதிருஷ்டவசமாக இந்த எளிய உண்மையை நமது ஆடுகள் புரிந்துகொள்வதில்லை. ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய வியட்நாம், ஜப்பான், போன்ற நாடுகளில் ஏகாதிபத்தியர் எப்படி நடந்து கொண்டனர் என்பதை நாம் அதற்குள் மறந்துவிட்டோமா?
இந்த ஆட்டத்தில் சோவியத் பேர்வழிகளும் இளைய பங்காளிகளாகச் சேர்ந்துள்ளனர். கொடுநெறியர் இன்று உலகுக்கே தன்னிச்சையாக கொள்கை வகுத்து திணித்துக்கொண்டுள்ளனர். உலகின் மீதான ஆதிக்கமே அவர்களின் ஒரே குறி. ஒன்றன் குறிக்கோளை ஐயமற புரிந்துகொள்வதே அதனை உண்மையான முறையில் ஆய்வு செய்வதன் முதல்படியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தியக் குறிக்கோளை உள்ளபடி புரிந்துகொண்டுவிட்டோம் என்றால் அடுத்து நாம் அதன் செயல் தந்திரம், கருவி முறை ஆகியவற்றை ஆராயப் புகலாம்.
நடுநிலையானது (வேல்யூபிரீ) எனப்படும் அறிவியல் உயர்தொழில்நுட்பமே புதுக்கொடு நெறியின் கருவி. உழவிலும், தொழிலிலும் கையாளப்படும் அறிவியல் ரீதி உற்பத்தி முறைகள் நிர்வாகமுமே புதுக்கொடு நெறியின் கருவி. தொழில், நிர்வாகம் ஆகியவற்றில் இங்கு நான் புகவில்லை. உழவை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.
இன்று அதிக மக்கள் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. கருப்பின மக்களாகிய நீங்கள் பன்றிகள் போல் பெற்றுத்தள்ளுகின்றீர்கள். இதனால் உங்களுக்கு உணவும் உடையும் அளிப்பதும், உங்கள் உடல் நலத்தைக் காப்பதும் வெள்ளையராகிய எங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்று நமக்குக் கூறப்படுகின்றது. இக்கூற்று புது ஏகாதிபத்தியரின் அவநம்பிக்கை நிலைப்பாட்டிலிருந்து எழுவதாகும், எனவே இத்தனைபேரையும் காப்பாற்ற மிக நவீன அறிவியல் மிக உயர் தொழில்நுட்பம் என்பதை அவர்கள் முன்வைக்கிறார்கள். (இன்று எல்லாவற்றிலுமே தொழில்நுட்பமே தலைவிரித்தாடுகின்றது. உணவு சமைப்பது முதல் மயிர் வெட்டுவது வரை) இந்நிலையில் விவசாயப் பெருக்கம், உணவு உற்பத்திப் பெருக்கம் என்பது ஓயாது ஜெபிக்கப்படும் விஷயமாகிறது.
நம்மை ஏமாற்ற வீரிய வித்துக்கள் என்று பெயரிட்டு, உயர் மகசூல் ரகம் (எச்ஒய்வி) என்ற பெயரிட்டு புதிய விதைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். உண்மையில் அதன் சரியான பெயர் “சோதா வித்துக்கள், சீக்கு தீராத ரகம்” என்று இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ரக விதைகளுக்கு வெகு ஆரம்பத்திலிருந்தே மருந்துகளும் ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. ஒரு குழந்தை இத்தகைய நிலையில் இருந்தால் அதனை கொழுகொழு குழந்தை, ஆரோக்கியமான குழந்தை என்று அழைப்போமா? மாட்டோம். ஆனால், இந்த விதைகளை மட்டும் நல்ல பேரிட்டு அழைக்கும்படி கூறுகின்றார்கள். அவ்வாறே அழைத்தும் வருகின்றோம்.. இதிலிருந்தே இவ்வித்துக்களை நம்மேல் சுமத்திவரும் ஏகாதிபத்தியரின் கெடுமதி புரியவில்லையா? நமது தலைமை அறிவியலாளரும் ஏகாதிபத்தியரின் தவறான வழிகளை அப்படியே ஏற்று உபதேசிக்கிறார்கள். சோவியத்தார் இதுகுறித்து வாயே திறப்பதில்லை. எல்லாம் கூட்டுச்சதி பாணியில் நடக்கிறது. மனித குலத்திற்கே எதிரான மிகப்பெரிய சதி என இதை வர்ணித்தால் அது தவறாகுமோ?
எனது சொந்த ஊர்க்கதையிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகிறேன். எங்கள் பகுதி பரம்பரையாக நெல் விளைவிக்கும் பகுதி. காவிரியின் துணை ஆறான வற்றாத பவானியிலிருந்து கால்வாய் மூலம் பாசனம் பெறுகிறார்கள் .நாங்கள் பலபத்துக் கணக்கான நெல் வகைகளை உற்பத்தி செய்து வந்தோம். அவை பலவித பெயருடையவை. தரப்படுத்தப்பட்டவை.
இந்த உள்நாட்டு ரகங்களுக்கு ரசாயன உரமோ பூச்சிக்கொல்லியோ, களைக்கொல்லியோ தேவையில்லை. (அந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை எனலாம். இந்தியாவில் ஏற்பட்ட எல்லாப் பஞ்சங்களும் ஆதிக்க மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவையே. குறைந்தது கடந்த 300 ஆண்டுகளுக்காவது இதுதான் உண்மை) இந்தியாவில் விவசாயத் தொழில்திறனை அக்காலத்தில் இங்குவந்த ரோமானியர்கள் புகழ்ந்திருக்கிறார்கள். கிராமத்து விவசாயி பெருமளவில் நடைமுறை அறிவு உள்ளவராக இருந்தார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் அறிவு பெற்றவர் ஆவதில்லை. மிகவும் சத்தான நெல்லுடன் அவரது உழவு மாடுகளுக்கு நல்ல வைக்கோலும் கிடைத்து வந்தது. அம்மாடுகள் இல்லாமல் அவரால் விவசாயமே செய்ய முடியாது. தொழுவுரமே அன்று நிலங்களுக்கு முழுவதும் போடப்பட்டது. பயிர் செய்யாத காலங்களில் பயறு வகைகளை விதைத்துவிடுவர். இது மண்ணின் நைட்ரஜன் சத்தை கூட்டித் தரும் கூடுதல் எருவாக அமைந்தது. ஆண்டுக்கு இரண்டு பட்டங்கள் பயிரிடப்பட்டன. எப்போதுமே உபரி கிடைத்து வந்தது.
குடியானவன் ஒருபோதும் விருந்தாளியை புறம்பே தள்ளான் என்பது பழமொழி. விருந்தாளி புறத்திருக்க விவசாயி தான் மட்டும் தனித்து உண்ண மாட்டார். ஆனால், இன்று விவசாயி தனதுஉணவுக்கே திண்டாடுகின்றார். ஆற்றிருந்து ஓரிரு (பர்லாங்) தள்ளி 5 ஏக்கர் நிலமும் 5 குதிரைவிசை இறைப்பியும் வைத்திருக்கிற விவசாயி தனது உணவுக்கே வழியற்று நிற்கிறார். சந்தையிலிருந்து மோசமான அரிசியை விலைக்கு வாங்க வேண்டியநிலை. பருப்பு வகையைப் பயிரிடுவதும் உணவில் சேர்ப்பதும் ஆகிய காலம் மலையேறி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிராமத்தினரின் எடை குறைந்தபட்சம் 10 கிலோ குறைந்துள்ளது மகத்தான பசுமைப் புரட்சித் திட்டம். அறிவியல் ரீதியான விவசாய தொழில் நுட்பம் காட்டு நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்றவற்றின் விளைவு கடைசியில் இதுதான்.
நகரத்தாரின் காலை, மாலை பாலுக்காக கிராமங்கள் கறக்கப்படுகின்றன.. நகரத்திற்கு ஒத்தாசையான விதேசி பால் மாட்டு இனங்களை இறக்குமதி செய்து உள்ளூர் இனங்களுடன் கலப்பு செய்கின்றது. இந்தக் கலப்பினக் காளைகள் உழவு வேலைகளுக்குப் பயனற்றவை. கசாப்புக்கே ஏற்றவை. பால் மாடுகளுக்கும் இப்போது தீவனம் செலவாகிறது.(உழவு மாடுகளுக்கு இல்லை)
தீவனம் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. உயர் மகசூல் ரகத்தின் வைக்கோல் சத்தற்றது. மாடுகளும் அவற்றை சரியாக உண்பதில்லை. எனவே விலைகொடுத்து தீவனம் வாங்குகிறார் விவசாயி. நகரத்து அதிகார வர்கத்திற்கு கொட்டிக் கொடுப்பதற்கேதான் உயிர் வைத்துக்கொண்டிருக்கிறார் விவசாயி. நகரத்து அதிகாரி உலக வங்கியிடம் சம்பளம் வாங்கும் ஊழியனாக இருக்கிறான். இவர்கள் எல்லோருமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரசாயன தொழில்துறையோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் புதிய ஆக்கங்கெட்ட ரகங்கள் புகுத்தப்படுவதற்கு முன்பு பூச்சிகள் அதிகம் இருந்ததில்லை. எலிகள்தான் தொந்தரவு கொடுப்பவையாக இருந்தன. அவற்றை கிராமத்தார் அவ்வப்போது ஒழுங்காகக் கொன்று வந்தனர். இன்று பயிருக்கு எதிரியாகிவிட்ட பல்காரிஸ் என்ற பூச்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு இருந்ததில்லை. இது எப்படி ஏற்பட்டது என்பதை எந்த அறிவியலாளரும் சொல்ல முடியவில்லை. இந்தப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக நாற்றுப் பருவத்திலேயே இந்தப் பூச்சி நாசமாக்கி வருகின்றது. ஏக்கருக்கு ரூபாய் 1500 வீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் இதனால் நட்டம் ஏற்படுகின்றது. இதற்குக் காரணமான ஐஆர் 50 என்ற நெல் ரகத்தை ஒவ்வொரு ஏழை விவசாயியும் நஞ்சென வெறுக்கிறார். இருப்பினும் அரசு இந்த ரகத்தை புகழ்ந்து தீவிரப் பிரச்சாரம் நடத்தாத நாளே இல்லை.
பயிருக்கு தீங்கு விளைவிக்காத பூச்சிகள் எப்படி திடீரென தீங்கு விளைவிக்கும் பூச்சிகளாக மாறுகின்றன? இதுபற்றி நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. எந்தப் பூச்சி உண்மையில் பயிருக்கு எதிரி என்பதை எந்த அறிவியலாரும் முன்கூற முடியாது என்பதே மிக முக்கிமான செய்தி. இந்தப் பூச்சிக் கட்டுப்பாடு வியாபாரத்தை உண்மையாகவே அறிவியல் ரீதியானது என்றும் அறிவானது என்றும் கூறமுடியுமா? பரிணாமத்தை மிகச் சிறப்பாக அறிந்த மாணவன்கூட இந்தத் துறையில் சுமாராகக்கூட முன்னறிந்து சொல்ல முடிவதில்லை. பல்காரிஸ் போன்ற தீங்கற்ற பூச்சி 10 ஆண்டுகள் கழித்து பெரிய நாசக்கேடாக மாறிவிடும் என அன்று எவரேனும் கற்பனை செய்திருக்க முடியுமா?
இயற்பியல் கோட்பாடுகளுக்குச் சமமான தகுதியுள்ளதாக பரிணாமக் கோட்பாட்டைக் கொள்ள இயலாது என்பதே நமது அனுபவங்கள் புகட்டுகின்ற பாடம். நியூட்டனின் புவிஈர்ப்புக் கோட்பாட்டுக்குச் சமமானதல்ல அது. ஒருபோதும் அப்படி ஆகவும் முடியாது. ஆகவே முன்னறிந்து கூறுவதில் நமக்குள்ள திறன்குறைவை அறிவியலுக்கே இருக்கக்கூடிய உள்ளார்ந்த வரம்பாக குறைபாடாகவே ஒப்புக்கொண்டு நாம் நமது பார்வையை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நேரெதிர் நிலையைத்தான் நாம் சந்திக்கிறோம். இந்தச் சிக்கலுக்கு நம் முன்னோர் கண்ட வழி என்ன? (வேண்டுமானால் அதை உணர்வு பூர்வமற்ற வழி எனலாம்)
வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் அரும்பிய பெரும் நாகரிகங்கள் மேற்கு நாடுகள் போல் அடிமைச் சமுதாயமாக அமைந்தன என்பதை விட விவசாயச் சமூகமாக அமைந்தன என்பதே உண்மை. இயற்கை கருணை மிக்கது. மனிதர்கள் பகை உறவு கொண்டால் மட்டுமே இயற்கை திருப்பித் தாக்கும் என்று இந்த நாகரீகர் கருதினர். இயற்கை அவர்களுக்கு அபரிதமாக உணவும் நீரும் வழங்கியது. அவர்களுக்கு எவ்வித குறையும் இயற்கை வைக்கவில்லை. பரிவுடன் பாலூட்டும் தாயாக இயற்கையை பாவிக்க வேண்டும். பொறாமையும் கண்டிப்பும் கொண்ட தந்தையாக பாவிக்கக்கூடாது. இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு அன்பு, ஒத்திசைவு, பரஸ்பர பரிவர்த்தனை கொண்டதாக இருக்க வேண்டும், இத்தகைய மனிதர்கள் இயற்கைக்கு எதிராக போக முடியுமா?
ஓரளவிற்குப் போகலாம். எந்த அளவிற்கு? பால்கொடுக்கும் தாயின் முளைக்காம்பை குழந்தை கடித்து விடும் அளவிற்கு. இதற்காகத் தாய் அக்குழந்தையை வெறுப்பதில்லை. தொடர்ந்து நேசிக்கவே செய்கிறாள். ஆனால் குழந்தை தாயின் மார்பை இறுக்கிப் பற்றி வற்ற வற்ற உறிஞ்சவும் கீறவும் ரத்தம் பீறிட கடித்துக் குதறவும் தொடங்குமாயின் இத்தகைய பேய்க்குழந்தையை தாய் கழுத்தைத் திருகி எறிந்துவிட மாட்டாளா? பசுவின் மடியை விசையுடள் முட்டி கன்று பால் குடிக்கின்றது, பசு காலை உயர்த்திக்கொண்டு கன்றை நக்கிக்கொடுக்கின்றது. ஆனால், பசுவுக்கு வலி ஏற்படுமாயின் கன்றுக்கு உதைதான் கிடைக்கும்.
எனவே, இயற்கையை நாம் 5% எதிர்க்கலாம். 95% ஒத்தே போகவேண்டும். எல்லாச் செயல்துறைகளிலும் இதனை நாம் சாதித்தால் மிக இணக்கமான வாழ்வை நிறுவுவோம். அங்கு ஒரு வாழ்க்கை மற்றொரு வாழ்க்கையை பேணும். இயற்கையுடனான உறவு” மேம்படும். ஆனால் இதற்கு எதிரான நிலையையே நவீன அறிவியல் வற்புறுத்துகிறது. இயற்கைக்கு 100% மும் எதிராக நின்றே நாம் செயல்பட வேண்டிய நிர்பந்தம் இங்கு உள்ளது. இதே வழியில் போனால் காலப்போக்கில் எதை எதிர்பார்க்கலாம் என்பதை நம்மால் நன்றாக உணர முடிகின்றது. இயற்கை அன்னையிடமிருந்து மிகப்பெரிய உதை கிடைக்கும். நாம் தீர்ந்து போவோம்.
அரக்க பல்லிகளான டினோசார்களும், அரக்க ஆமைகளாக அம்மோனைட்டுகளும் அரக்க யானைகளான கம்பளி யானைகளும் எப்படி திடீரென இல்லாதொழிந்தன என்பதை இதுநாள்வரை விலங்கியலார் நிச்சயமாக சொல்ல இயலாதிருக்கிறார்கள். இது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. ஆனால் ஒன்றுமே திருப்திகரமாக இல்லை. அந்த அரக்க பல்லிகளுக்கு எதிர்ப்பே இல்லை. உணவோ அபரிமிதமாக இருந்தது. ஆயின் அவை அறவே மடிந்துபோனதை என்னவென்போம். உலகம் அவற்றினுடையதாக இருந்தது. அன்று மனிதர் வேறு இல்லை. ஆகவே ஏதாவது ஒரு வெளிப்புறக் காரணத்தையே எல்லா விலங்கியலாளரும் கூறப் பார்க்கிறார்கள். அவையெல்லாம் புவியில் மாற்றங்கள் தொடர்பான காரணங்களே. சிலர் இவ்வரக்கப் பிராணிகளின் முட்டை நிலையிலேயே அவற்றை சில பிராணிகள் கொன்று விட்டன என்பர். ஆயினும் வெளிப்பார்வைக்கு வெல்லற்கரியதான இவ்வுயிரிகள் மாயமாக மறைந்ததை இக்கோட்பாடுகள் எதுவுமே நம்பகமான முறையில் விளக்குவதாக இல்லை.
மரணம் புறத்திலிருந்து வருவது என யூத கிருத்துவ -போகோனிய சிந்தனை கருதுகின்றது. ஒன்றன் சொந்த நடவடிக்கைகளே அதன் மரணத்திற்குக் காரணம் என்பது இல்லை. மரணம், அகநிலையானதல்ல. இதற்கு மாறாக கீழைச்சிந்தனை உனது விதியை உனது கருமங்களே தீர்மானிக்கின்றது என்கிறது. அளவற்ற பேராசையே அழிவிற்குக் காரணம். மனிதருக்குக் கூறப்பட்டவை அதே அளவிலும், விதத்திலும் பிற உயிர்களுக்கும் பொருந்தும். அந்த அரக்கப் பிராணிகள் சில கொடிய நுண்கிருமித் தொற்றுகளைத் தடுக்கும் திறனுடைய பல சிறு உயிர்களை அழித்திருக்கலாம். (ஜமைக்காவில் கொசுக்களை சிறு பல்லிகள் கட்டுப்படுத்துவதன் மூலம் மஞ்சள் காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்துகின்றன) வரம்பு மீறுவதன் விளைவு இதன்றி வேறல்ல. அதுவரை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நோய்கிருமிகள் திடீரென கட்டவிழ்ந்து பரவிவிடலாம். (நமது நெல் வயல்களில் பல்காரிஸ் பரவியது போல ) பரவி வெல்லற்கரிய டினோசர்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.
எனவே, உண்மையானதும் சாத்திமானதுமான எதிரியை தொடர்ச்சியாக அழித்துக்கொண்டிருப்பதன் மூலமும் உணவை அடையக் கையாளப்படும் பலவித தந்திரங்கள் மூலமே தொடர்ந்து பிழைத்துவிட முடியாது. எனவே, இறுதி உண்மை என்னவெனில் “வலுவற்றதே வாழும்” என்பதுதான். பிற உயிர்களுடன் ஒத்து வாழ்வதன் மூலம் எதற்குத் தான் இரையாக நேருமோ அதனுடனும், ஒத்து வாழ்வதன் மூலம் வலுவற்றதே இறுதியில் வாழும்.
இரைப்பிராணி-வேட்டைப்பிராணி உறவு நல்ல எடுத்துக்காட்டு. பலமற்ற பயனற்ற இரைப்பிராணிகளை ஒழிக்க வேட்டைப்பிராணியே இல்லாவிடில் இத்தகைய இரை பிராணிகள் அதிகரித்து அவற்றின் எதிர்ப்புத்திறன் குறைந்து இனமே அற்றுப்போகும் அபாயம் நேரும். அவ்வாறு வேட்டைப் பிராணி தன் இரையை மிகுதியாக வேட்டையாடி வந்தால் தனது சொந்த உணவு அடிப்படைக்கே குழி பறித்து தனக்கும் முடிவைத் தேடிக்கொண்டதாகும். எனவே, இவ்வுறவு சமமாயும் பரஸ்பரமாயும் இருப்பதுதான் வெற்றிகரமான தொடர்ந்த பிழைப்புக்கு உதவும்.
உயிர்களின் உலகில் காணப்படும் தீவிர பரஸ்பரமும் ஒத்துழைப்பும் கண்டு போற்றத்தக்கதாகும். இயற்கையில் உள்ள முரண்பாடு ஒருபோதும் ஆதிக்கத் தன்மை, பகைத்தன்மை பெறுவதில்லை. ஆனால், இயற்கையின் ஒத்திசைவை அளவுக்கு மீறி நாம் கெடுத்தால் முரண்பாடு வெடிக்கும். முதல்பலி நாமாகத்தான் இருப்போம். கெடுவான் கேடுசூழ்வான். தப்பிக்க முடியாது. கீழை நாகரீகம் உணர்த்தும் பேருண்மை இது. மேலை உலகு இதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இவ்வுண்மையை அது புரிந்துகொள்வதற்கு முன்பாகவே தன் ஆணவம் காரணமாக மொத்த உயிரினங்களின் வாழ்விற்கும் ஒருவேளை அது உலைவைத்துவிடக் கூடும். இந்த உயிரினக் கொலையைத் தடுத்து நிறுத்த ஏழை நாடுகளின் மக்களாகிய நாம்தான் உடனடியாக ஆவன செய்ய வேண்டும். இந்த யுகத்தின் பிரதான வேலையாக இறுதியில் இதுவே அமையும்.
1987-ல் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு
எஸ்,என்,நாகராஜன்
(1987/ல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடாக வந்த அழிவின் தத்துவம் என்கிற சிறு வெளியீடு தற்போது பதிப்புரையுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது)
பதிப்புரை
எந்த ஒரு நூலும் அது எழுதப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகள் கழித்துதான் அது சமூகத்திற்குத் தேவையானதா அல்லது தேவையற்றதா என்பதை உறுதி செய்ய இயலும் என்று நூலோர் குறிப்பிடுவர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடாக 1987 ஆம் ஆண்டு அறிஞர் எஸ்.என்.நாகராசன் அவர்கள் எழுதிய அழிவின் தத்துவம் என்கிற நூல் அந்த வரையறைக்கு மிகவும் பொருத்தமான நூலாக இருந்துள்ளதை இன்றுள்ள சூழல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ள இயலும். அந்நூல் இப்போது மறுபதிப்பு செய்யப்படுகின்றது.

எஸ்.என்.நாகராசன்