பெய்யும் மழையும்; பொய்யா மொழியும்.
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
வான் சிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரத்தின் முதல் குறள் இது.
வானத்திலிருந்து மழை பொழிந்து அதனால் உலக உயிர்கள் உயிர்த்து வருவதால் மழையை அமிழ்தம் என்று உணரப்படும் என பெரும்பாலோர் பொருள் கூறுவர்.
திருக்குறளின் ஒவ்வொரு சொல்லும், அது சொல்லப்பட்ட பாங்கும், அதிகாரத்தில் அந்த குறள் அடுக்கப்பட்ட முறையும் என அனைத்துமே கவனிக்கத்தக்கன. அவ்வகையில் வான் சிறப்பு என்னும் அதிகாரத்தின் முதல் குறளான இக் குறளையும் அந்த வகையில் நுணுகி ஆராய முனையலாமா?
வானின்று ........வானத்திலிருந்து
உலகம் வழங்கி வருதலால்..................உலகத்திற்கு மழையை வழங்கி வருவதால்
தானமிழ்தம்.................அமிழ்தம் என
என்றுணரற் பாற்று......................உணரத்தக்கதாகும்.
என சொற்பொருள் கொள்வது இயல்பே.
இந்தக் குறளை ஆராயுங்கால்.
வானத்திலிருந்து பொழிந்தாலும் மழையின் ஊற்று கடலல்லவா?
எனில் கடலில் இருந்து முகந்து வரும் நீரை வானத்திலிருந்து வருவதாகச் சொல்கின்றாரே திருவள்ளுவப் பேராசான்? அது தவறல்லவா?
அதுபோலவே பொழிகின்ற மழையால் தளிர்க்கும் புல், பூண்டு, உயிர்கள் எல்லாம் ஒரு காலத்தில் மடிந்து போகின்றனவே. அமிழ்தம் என்பது உயிரைப் போகாமல் செய்வதான பொருளன்றோ? எனில் மழை எனும் அமிழ்தத்தை உண்ணும் உயிர்கள் அழியாமல் அன்றோ இருக்க வேண்டும். ஆனால் எல்லா உயிர்களும் ஒருகால் அழிந்து போகின்றனவே? பேராசான் மழையை சிறப்பிக்க பொய் சொன்னாரா? என்கிற வினாக்களும் எழுவது இயல்பே.
ஆனால் பொய்யாமொழித் தெய்வப் புலவன் எப்போதும் பொய் சொன்னதில்லை.
பொய்மையும் வாய்மை இடத்த........எனச் சொன்ன பேராசான், தான் எப்போதும் வாய்மைக்காகக்கூட பொய் சொல்லாமல் வாழ்ந்த பேராசான். எனவே அவரது சொற்களில் பொய் இருக்கவே இருக்காது. எனில்,
அவர் சொன்னதன் பொருளென்ன என ஆராயலாம்.
இந்த மண்ணுலகம் திருக்குறளின் முதற்குறளில் சொல்லப்பட்டது போல ஒன்றிலிருந்து பகவாகி உதித்தது.
உலகம் தோன்றிய காலத்தில் மண்ணுலகில் தண்ணீர் இல்லை.
இந்த உலகமும் மற்ற கோள்களைப் போலவே தண்ணீரற்ற கோளாகவே இருந்தது. பல்வேறு விண்கற்கள் பலகாலம் பூமியின் மீது மோதுண்டு மோதுண்டு பூமி பள்ளமும் மேடுமாகியது. அப்படி பலகாலம் மோதுண்ட விண்கற்கள் பூமிக்கு கொண்டு வந்து சேர்த்ததே தண்ணீர்.
தண்ணீர் படிமங்களை விண்கற்களே பூமிக்கு கொண்டு வந்து சேர்த்தன என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அப்படிமங்கள் இன்றைக்கு நாம் காணும் தண்ணீர் போன்ற வடிவத்தில் இல்லாமல் படிமங்களாகவே இருந்தன. அண்மையில் அது போன்ற தண்ணீர் படிமங்களைத்தான் நிலவிலும், செவ்வாயிலும் கண்டறிந்துள்ளனர் அறிஞர்கள்.
எனவே உலகத்தில் இன்றுள்ள தண்ணீரைக் கொடுத்தது வானமே எனச்சொன்ன பொய்யா மொழிப் புலவனின் தாள்களைப் பணிவோம்.
அதுபோலவே, அமிழ்தம்.
அமிழ்தம் என்பது சாகாமல் இருக்கச் செய்யும் நீர்மம்.
அதை உண்டவர்கள் சாக மாட்டார்கள் இறப்பென்பதை இல்லாமல் செய்வது அமிழ்தம் எனில் மழை அமிழ்தமினது எவ்வாறு?
இதற்கும் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்றுள்ள உயிர்கள் ஆழ்கடலில் தோன்றிய ஒரு செல் உயிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வளர்ந்து வளர்ந்து உருமாறி உருமாறி சூழலுக்குத் தக்கவாறு பரிணாம வளர்ச்சி பெற்றவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனில் முதலில் தோன்றிய உயிர் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை பலகோடி கோடி உயிர்களாக விரிந்து உலகம் முழுவதும் பரந்துள்ளது. இது அழிந்து போககவில்லை.
ஒற்றை உயிராகப் பிறந்த உயிர் இன்னமும் அழியாமல் தொடர்ந்து வருகின்றது. நமக்குத்தான் இவை வெற்வேறு உயிரினங்கள். இயற்கைக்கு முன் நாம் அனைவரும் ஒற்றை உயிர். அந்த ஒற்றை உயிரை இன்னனும் இறக்காமல் காத்து வருவது தண்ணீர்.
எனவே தண்ணீர் அமிழ்தமாயிற்று.
பொய்யா மொழிப் புலவனின் தாள்களைப் பணிவோம்.
(திருவள்ளுவர் அறக்கட்டளை அமைப்பாளர் மறைந்த எம் தந்தை மா.செ.தமிழ்மணி அவர்களின் பிறந்தநாள் நினைவாக)
அன்பன்
தமிழினியன்.

தண்ணீர் வானத்திலிருந்து வந்தது என்பது குறித்த ஒரு விழியம்.
https://youtu.be/QHppz7heeD4?t=3